நம்மூர் தெருக்களில் நீங்கள் நன்றாக கவனித்தால், எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் சுற்றுகிறது. இந்த வேடிக்கை புத்தி நம்மூர்காரனுக்கு மட்டுந்தானா? வெளிநாட்டுகாரனுக்கும் உண்டா? என்ற யோசனை எனக்கு அடிக்கடி தோன்றி மறையும். அது கல்யாண ஊர்வலமா இருக்கட்டும், யாரோ ஒரு ஏழை அடிபட்டு ரத்தம் சொட்ட கெடக்கட்டும்... எல்லாத்தையும் கூடி கூடி வேடிக்கை பார்க்கிறானுக. சரி.., பிரச்சனைக்கு போலிஸ் ஸ்டேஷன் வரணும்னா, 'ஐயோ, நமக்கு ஏங்க வம்பு?'னு சட்டுனு நடைய கட்டுவானுக. நான் கேக்குறேன் 'உன்னால ஸ்டேஷனுக்கெல்லாம் வரமுடியாதுல்ல? அப்புறம் என்ன ________க்கு வேடிக்கை பாக்குற? உனக்கு எல்லமே time passஆ? உன்னால traffic jam ஆகி ரோட்ல போகிறவனுக்கும் அவஸ்தை. அதாவது நம்மாளு ஓசில பொழுதுபோக்கணும்னா எதுக்கும் தயார்.
இதைவிட மோசம், கிராமத்தில... அது எப்படிதான் வராங்களோ தெரியல்ல..? அடிதடில ஈடுபட்டவன் சமரசமா போனா கூட இவன் சமாதானம் ஆகமாட்டேங்கிறான். அதுவும், பல டீக்கடைகள்-ல இதுக்குன்னே ஒரு கூட்டம் காத்திட்டிருக்கு. இந்த விஷயத்தை ஒரு மனோதத்துவ டாக்டர்கிட்ட கேட்கணும்னு ஆசை. ஆனா, பிரச்சனை அந்த விஷயத்தை சுலபமா சொல்லாம, அதுக்கு ஏதேதோ medical term சொல்லி நமக்கு புரிஞ்சதையே வேற மாதிரி சொல்லி தலைகாய வைப்பாங்களோன்னு யோசனையா இருக்கு.
அடுத்த முறை, ரோட்ல ஏதாவது விபரீதம்னா, முடிஞ்சா உதவுங்க. இல்லாட்டா, பஸ்ஸிலேர்ந்து கொக்கு மாதிரி தலைய நீட்டி வேடிக்கை பார்க்கிற அளவுக்கு ஆர்வம் காட்டாதீங்கப்பா.

No comments:
Post a Comment